பீகார்’ல் 500க்கு 444 எடுத்த மாணவி கைது

பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலை பாடப்பிரிவில் 500க்கு 444 மதிப்பெண் பெற்று ரூபி ராய் என்ற மாணவி முதலிடம் பெற்றிருந்தார். இதையடுத்து தொலைக்காட்சிகள் அவரிடம் பேட்டி கண்டன. அப்போது அவர், அரசியல் அறிவியல் பாடத்தில் சமையல் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருக்கும் என கூறியது சந்தேகத்தை கிளப்பியது.

rubi-rai-bihar-interview பீகார்'ல் 500க்கு 444 எடுத்த மாணவி கைது

அந்த பேட்டி சந்தேகத்தை எழுப்ப, அவரை மறுதேர்வு எழுதுமாறு உத்தரவிடப்பட்டது. மறுதேர்வு தேர்வில் ஒரு கேள்விக்கு கூட மாணவி சரிவர பதில் அளிக்காததால் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக ரூபி ராயை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.