என்ஜினீயர் சுவாதி கொலை: 2 வாலிபர்கள் 3 தோழிகளிடம் விசாரணை

சென்னை,

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர்  சுவாதி, கடந்த வெள்ளிக் கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் கொடூரமான முறை யில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இத்துணிகர கொலை சம்பவம் சென்னை மட்டு மின்றி தமிழகம் முழுவதுமே பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சுவாதி கொலை தொடர் பாக முதலில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

swathy-last-wish-300x300 என்ஜினீயர் சுவாதி கொலை: 2 வாலிபர்கள் 3 தோழிகளிடம் விசாரணை
மொத்தம் 8 தனிப்படையினர் சுவாதி கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள்.சுவாதியின் குடும்பத்தின ரிடம் நடத்தப்பட்ட விசார ணையில், போலீசுக்கு பல் வேறு தகவல்கள் கிடைத்தன. நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர். இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளி பற்றி துப்பு துலங்கிவருவதாக கூறப் பட்டது. கொலையாளியை போலீசார் நெருங்கி விட்ட தாகவும் தகவல்கள் வெளி யானது.

ஆனால் இந்த விசாரணை யின் முடிவில் போலீசாரால் கொலை யாளியை இன்னும் நெருங்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இருப்பினும் சுவாதி கொலை தொடர்பாக சந்தேகத்துக்கிடமான 2 வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் முழுமை யாக கொண்டு வரப்பட் டுள்ள இந்த 2 இளைஞர்களிடம் இருந்தும் விசாரணைக்கு தேவை யான தகவல்களை திரட்டி யுள்ளனர். அதே போல சுவாதியின் நெருங்கிய தோழிகள் 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுவாதியை பின் தொடர்ந்து சென்று, வாலிபர்கள் யாரேனும் தொல்லை கொடுத்தார்களா? அதனை நீங்கள் யாரும் நேரில் பார்த்தீர்களா? இல்லை அது தொடர்பாக சுவாதி உங்களிடம் ஏதேனும் தகவல் களை பகிர்ந்து கொண் டாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி உள்ள னர்.இதற்கு பதில் அளித்த தோழிகள் சிலர், போலீசுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். சுவாதி தினமும் நடந்து செல்லும் பாதையில் யாராவது அவருக்கு தொல்லை தந்தார் களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள கோவி லுக்கு சுவாதி செல்லும் போது, வாலிபர் ஒருவர் வந்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிரச்சினை செய்த தும் கண்டு பிடிக்கப்பட்டுள் ளது. அவர் யார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இப்படி சுவாதி கொலை யில் பல்வேறு கோணங்களில் விசாரணை  முடுக்கி விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.