காலை 4 மணிக்கே கபாலியை நெட்டில் விட்ட Tamilrockers

‘கபாலி படம் உலகம் முழுக்க தியேட்டர்களில் ரிலீஸாகி ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் களை கட்டி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் சர்வசாதாரணமாக திருட்டுத்தனமாக கபாலி படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விட்டனர். ஏற்கனவே இதுபோன்ற இணையதளங்களை முடக்க சொல்லி தயாரிப்பாளர் தாணு வழக்கு தொடர்ந்து, ஐகோர்ட்டும் சுமார் 200 இணையதளங்களை தடை செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனபோதும் கபாலி படம் சில விஷமிகளால் இணையதளத்தில் வெளியிடப்பட்டு விட்டது. tamilrockers  இணையதளத்தில் கபாலி படம் முழுவதுமாக லீக்காகியுள்ளது. அதுவும் ஹெச்டி தரத்துடன் வேறு உள்ளது என்று பதிவிட்டிருக்கிறார்கள்.கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுத்துவிட்டு போட்ட காசு வருமா… என்று தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கதி கலங்கி போய் இருக்கும் நிலையில், இப்படியொரு கேவலமான செயல்களில் சிலர் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது.இதற்கு விமோசனமே கிடையாதா…!

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.