வீட்டில் கழிவறை கட்டினால் ‘கபாலி’ டிக்கெட் இலவசம் !

புதுச்சேரியின் புதிய ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றவுடன் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

அதன்படி புதுவை அரசு, வீடுகளில் கழிவறை கட்ட அரசு ரூ. 20 ஆயிரம் மானியம் தருகிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சியாக கழிவறை கட்ட முன்வரும் குடும்பத்துக்கு ரஜினி நடித்த ‘கபாலி’ படத்தின் 4 டிக்கெட்டுகள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது என, புதுச்சேரி ஆட்சியர் ஜவஹர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டரில் பக்கத்தில், “புதுச்சேரி கலெக்டர் கழிவறை கட்டுவோருக்கு இலவச திரைப்பட டிக்கெட் தர உள்ளது நல்ல பலன் தரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.