மேலும் ஒரு கொலை: நெல்லையில் மாணவி வெட்டிக் கொலை

நெல்லை மாணவி வெட்டிக் கொலை: மாலா என்ற கல்லூரி மாணவியை நெல்லை மூன்றடைப்பு அருகே அண்ணனே வெட்டிக் கொலை செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தலைமைறைவாகியுள்ள அண்ணன் கிருஷ்ணராஜா வை போலிசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மூன்றடைப்பு  மேலமூன்றடைப்பில் வசிக்கும் சிதம்பரம் என்ற கணேசனுக்கு ஒரு மகள் இரண்டு மகன்கள் உள்ளனர்.

மகன் கிருஷ்ணராஜா வயது 25 சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். மகள் மாலா வயது 22 பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.சி படித்து வந்தார்.

கல்லூரிக்கு பஸ்சில் வந்து சென்றதில் ஏற்கனவே திருமணமாகி 2 குழுந்தை உள்ள நெல்லை புதிய பேருந்த நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும் சார்லஸ் என்வருக்கும் மாலாவிற்கு பலக்கம் ஏற்பட்டள்ளது.

பெற்றோர்களுக்கு மாலாவின் இந்த காதல் விவாகரம் தெரியவந்ததும். கண்டித்து கல்லூரிக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர். காதலனை பார்காமல் தவித்த மாலா  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டையில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி தப்பி சென்றுள்ளார். மாலா மற்றும் காதலன் சார்லஸ் ஆகிய இருவருரையும் இதன் பிறகு காணவில்லை இருவரும் சேர்ந்த தலைமறைவாகியுள்ளனர்.

உடனடியாக இது குறித்து மாலாவின் பெற்றோர் போலிசில் புகார் அளித்தனர். போலிசார் மாலா மற்றும் சார்லஸ் இருவரையும் கண்டுபிடித்து மாலாவை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாலாவிற்கு திருமணம் ஏற்பாடுகளை பெற்றோர் செய்துள்ளனர். இதற்கு மாலா சம்மதிக்க வில்லை.

[the_ad_placement id=”manual”]

ஊருக்கு வந்த அண்ணன் கிருஷ்ணராஜா தங்கை மாலாவிடம் திருமணத்திற்கு சம்மதிக்குமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் ஞாயிற்று கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் அண்ணன் கிருஷ்ணராஜா தங்கை மாலாவை அரிவாளால் சரமாறியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுது நேரத்தில் மாலா இறந்து விட்டார்.அண்ணனன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.