ஸ்வாதி படுகொலை வழக்கு: ஆண் நண்பரிடம் விடிய விடிய விசாரணை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் ஆண் நண்பரிடம் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் முன்னிலையில் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. அப்போது, இணை ஆணையர் அன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

[the_ad_placement id=”manual”]

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு இரவு 9 மணிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சுவாதியுடன் அலுவலகத்தில் பணி புரியும் அவர், படுகொலைச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரம் முன்பாக சுவாதியுடன் செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது, இருவரும் என்ன பேசினர்‌? சுவாதி ஏதேனும் தெரிவித்தாரா? என பல்வேறு கோணங்களில் 8 தனிப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவாதி கடையாக பேசிய 5 லட்சம் அழைப்புகளை தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதனடிப்‌படையில், முன்னதாக நேற்று சுவாதியின் தோழியிடம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, சுவாதி கொலை தொடர்பாக நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அடுக்கு மாடி குடியிருப்பு உள்ள கேமராவில் குற்றவாளி காட்சிகள் எதுவும் பதிவாகி உள்ளதா எனவும் அவர்கள் சேகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.