சுவாதியின் கடைசி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான்!

இம்மாதம் (ஜூன் -2016) 24ம் தேதி பரிதாபமாகக்  கொல்லப்பட்ட பெண் சுவாதி. சம்பவம் நடந்து ஒருவார காலம் ஆகியும் கூட கொலையாளி குறித்த முழுமையான வடிவை எட்ட முடியாத நிலைதான் சென்னை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

swathionenew சுவாதியின் கடைசி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான்!

முதலில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி பலாப்பழம் வெட்டும் கத்தி என்றும் அந்த வகைக் கத்தி சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உருவாக்கப்படும் கத்தி என்றும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், கொலையாளி வட இந்திய வாலிபர் என்றும், கொலைக்கு பயன்படுத்தப் பட்ட கத்தி வடமாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்றும் தகவல்கள் பறந்து கொண்டிருந்தாலும் அவைகளில் உண்மை இல்லை என்றோ, உண்டு என்றோ உறுதியான முடிவுக்கு வர முடியாத நிலையில், சென்னை போலீசார், ‘கொலையாளியாக இவனை சந்தேகப் படுகிறோம்’ என்றொரு படத்தை வெளியிட்டுள்ளனர்.

போலீசார் வெளியிட்டுள்ள படமானது, கொலைச் சம்பவம் நடந்த அன்றே சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய அதே படம்தான். சம்பவ இடத்திலிருந்து கொலைகாரன் பயன்படுத்திய கத்தியைத் தவிர்த்து வேறெந்த தடயத்தையும் கைப்பற்ற முடியாத அளவில் கொலையாளியின் தெளிவு போலீசாரை திணற வைத்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சுவாதி பயன்படுத்திய செல்போன் குறித்த தகவல் இதுவரையில் இல்லை. சுவாதி கொலை செய்யப் பட்ட 24ம் தேதி  முதல் 27ம் தேதி (திங்கட்கிழமை) காலை வரையில் சுவாதியின் முகநூல் கணக்கிலிருந்த அவருடைய படங்கள் ஊடகங்களில் எடுத்தாளப் பட்டன, பிற்பகலில் சுவாதியின் முகநூல் கணக்கு முடக்கப் பட்டது.

சுவாதி, ஜூன் 15-ம் தேதியன்றுதான் இறுதியாக (!?) தன்னுடைய முகநூல் கணக்கில் ‘ஸ்டேட்டஸ்’ போட்டிருக்கிறார். அதற்குப்பின் அவருடைய கணக்கில் இருந்து எந்த ஸ்டேட்டஸும் போடப் படவில்லை. சுவாதியின் மரணத்துக்குப் பிறகு அவரது ஃபேஸ்-புக் பக்கத்தை போலீஸார் முடக்கிவிட்டனர்.

சுவாதியின் பழைய ஸ்டேட்டஸ்களை, போலீசார், தீவிரமாக துருவி வருகின்றனர். ஃபேஸ்-புக்கில் 753 பேர்  ஃபாலோ செய்கிறார்கள். அவர்களில் ஒருவர், சுவாதி போட்ட பதிவை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்திருக்கிறார்.

அதில், ‘தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். எந்த மனநிலையில் இப்படியொரு ஸ்டேட்டஸை சுவாதி போட்டார் என்பதற்கான விடையைத் தேடும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸ் டீம் தற்போது மும்முரமாக இறங்கியிருக்கிறது.

சுவாதியின் கடைசி பதிவு யாருக்கானது என்பது பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.