Tamil love Kavithaigal

Tamil love Kavithaigal

Feelings Only…

thodarai_images_with_quotes_2 Tamil love Kavithaigal

அந்த இரவு
மிகநீண்ட இரவாகவே கழிந்தது
புரண்டு புரண்டு படுத்தும்
தூக்கம் தொலைத் தூரத்திலேயே இருந்தது

கட்டுப்படுத்தப்பட்ட
எண்ணங்கள் அனைத்தும்
முட்டிமோதி
கண்ணீராய் கரை ஒதுங்கியது

உன்மடியில்
புதைந்து அழுதிருந்தால்
என் கண்ணீரால் நனைந்த
உன் ஆடையுடன்
என் துக்கங்களும் கரைந்திருக்கும்

முறிந்த உறவு
மீண்டும் முளைக்கும்
என்ற கனவுடன்
கடந்துக் கொண்டிருந்த நாட்களில்
வந்த அந்த இரவு
என் நம்பிக்கையை சிதைத்தது

தொடரும் சாத்திக்கூறுகளற்ற
ஒரு பிரிவின் வலி
ஒரு மரணத்தின் வலி

சிலையாய் செதுக்கப்பட்ட
பனிக்கட்டியொன்ற
ஓசையின்றி கரைந்துக் கொண்டிருக்கின்றது
இனி அது
தண்ணீராய் தவழ்ந்து செல்லும்
எந்த அடையாளமும் இல்லாமல்

அந்த இரவில்
எனது எண்ண அலைகளை
உன் அலைபேசி ஒலிகற்றைகள்
காட்டியிருக்கும

இரவின் நிசப்தத்தில்
என் விம்மல்கள்
உன் இதயத்தின் கதவுகளை
தட்டியிருக்குமா

கேள்விகளுடன் நீண்ட அந்த இரவு
விடியாமல் நீடித்திருந்தால
ஒரு கவிதையின்
மரணம் மட்டுமே நிகழ்ந்திருக்கும்..

 

15391055_729244130572580_3038666926315801535_n Tamil love Kavithaigal

 

பிரிவின் வலி அறிந்துதான்
இரவும் பகலும்
இணையாமலிருக்கிறதோ!

அறிவு அறிவதையெல்லாம்
மனம் ஏற்றுக்கொள்வதில்லை,
அதுபோலத்தான் நம்
பிரிவும்…..அழகான காதல்.

One thought on “Tamil love Kavithaigal

Leave a Reply

Your email address will not be published.