மெட்ரோ படம் பாணியில் திருச்சியில் செயின் பறிப்பு.. மேலும் படிக்க

திருச்சியில் நடைபயிற்சி சென்ற வங்கி பெண் மேலாளரிடம் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வங்கி பெண் மேலாளர்

திருச்சி அரியமங்கலம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மனைவி கோமதி(வயது 49). இவர் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் மேலாளராக உள்ளார். நேற்று அதிகாலை கோமதி வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.

அவர்களில் ஒருநபர் கீழே இறங்கி கோமதியிடம் வந்து ஏதோ ஒரு பெயரை சொல்லி முகவரி விசாரித்தார். அப்போது அந்த நபர் திடீரென்று கோமதி கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். ஆனால் அந்த வாலிபர் வேகமாக ஓடிச் சென்று அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி, 2 வாலிபர்களும் தப்பி சென்றனர்.

வலைவீச்சு

உடனே இது குறித்து கோமதி அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சங்கிலி பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.